இளிவரின் வாழாத மானம் உடையார்ஒரு இழிவு நேர்ந்தால் அதன்பின் உயிரோடு வாழாத மானமுள்ளவர்கள் புகழை இந்த உலகம் தொழுது நிற்கும்.
ஒளிதொழுது ஏத்தும் உலகு (மானம்; 970)
The world would praise the fame of those who wouldn’t live on once they face a disgrace.
இளிவரின் வாழாத மானம் உடையார்ஒரு இழிவு நேர்ந்தால் அதன்பின் உயிரோடு வாழாத மானமுள்ளவர்கள் புகழை இந்த உலகம் தொழுது நிற்கும்.
ஒளிதொழுது ஏத்தும் உலகு (மானம்; 970)
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின் (மானம்; 965)
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன்னுடைய மானத்தைக் கைவிட்டுக் கீழான செயல்களச் செய்பவர் தலையில் இருந்து உதிரந்துவிட்ட முடியைப்போன்றே எண்ணப்படுவார்.
நிலையின் இழிந்தக் கடை (மானம்; 964)
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறியசெல்வம் மிகுந்த காலத்தில் பணிவுடனும், செல்வம் குறைந்து வறுமை வந்த காலத்தில் தன் குலப் பெருமையை மனதில் கொண்டு கீழான செயல்களைச் செய்யாமலும் இருக்க வேண்டும்.
சுருக்கத்து வேண்டும் உயர்வு (குடிமை; 963)
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்இன்றியமையாத செயல்களே ஆனாலும் குல மானத்தைக் குன்றச் செய்யும் செயல்களைச் செய்யாது விடுக.
குன்ற வருப விடல் (மானம்; 961)
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்ஒரு நிலத்தின் தன்மையை அதில் விளைந்த பயிர் காட்டும். அதுபோல, நல்ல குடும்பத்தில் பிறந்தவரை அவர் வாயிலிருந்து வரும் சொல் காட்டும்.
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல் (குடிமை; 959)
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் ஏற்படும் குறை, நிலவிலுள்ள கறை போல அனைவருக்கும் தெரிந்துவிடும்.
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து (குடிமை; 957)
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்புன்னகையோடு கூடிய முகமலர்ச்சி, வறியவர்க்கு வேண்டும் பொருள் கொடுப்பது, இனிமையான சொற்களைப் பேசுவது, எதையும்/எவரையும் இகழ்ந்து பேசாமை, ஆகிய நான்கும் உயர்குடும்பத்தில் பிறந்தவரது குணங்கள்.
வகையென்ப வாய்மைக் குடிக்கு (குடிமை; 953)
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் ஒழுக்கம், உண்மை, நாணம் ஆகிய மூன்றிலிருந்தும் விலகமாட்டார்.
இழுக்கார் குடிப்பிறந் தார் (குடிமை; 952)
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்நோயாளியின் வயது, எடை முதலான உடல் அளவு, நோயின் தீவிரம், மருத்துவத்திற்குச் சரியான காலம் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்து மருத்துவம் செய்ய வேண்டும்.
கற்றான் கருதிச் செயல் (மருத்துவம்; 949)