அக்டோபர் 10, 2013

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு (சான்றாண்மை; 987)
தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யாவிட்டால் ஒருவர் கொண்ட சான்றாமையினால் பயன்தான் என்ன?

What good is the character of a perfect person if they won’t do good back to those who did bad to them?

அக்டோபர் 9, 2013

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல் (சான்றாண்மை; 986)
தனக்கு இணையல்லாத கீழோரிடமும் தன் தோல்வியை ஒத்துக்கொள்ளும் நேர்மையே நற்குணங்கள் நிறைந்த சான்றாண்மைக்கு உரைகல் ஆகும்.

Touchstone for perfection — i.e. possessing various good characters — is the honesty of accepting defeat even from lowly opponents who are no match for us.

அக்டோபர் 8, 2013

ஆற்றுவார் ஆற்றுதல் பணிதல் அதுசான்றோன்
மாற்றாரை மாற்றும் படை (சான்றாண்மை; 985)
ஒரு செயலைச் செய்து முடிப்பவரது திறமை அச்செயல் ஆவதற்குத் துணையாய் இருப்பவருடன் பணிந்து சேர்ந்துகொள்ளுதல். அப்பணிவே சான்றோர் தமது பகைவருடனான பகைமையை அழிக்கும் கருவி.

The secret of completing any task is humbly uniting with those who help to make the task happen. Humbleness is also the tool that perfect people use to destroy the enmity of their enemies.

அக்டோபர் 7, 2013

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு (சான்றாண்மை; 984)
பிற நற்குணங்கள் தேவை என்றாலும், தவத்துக்குக் கொல்லாமை முக்கியமான தேவை. அது போலவே பிற நற்குணங்கள் தேவை என்றாலும், மற்றவருடைய குற்றங்களை வெளிச்சொல்லாதது சான்றாண்மைக்கு முக்கியமான தேவை.

Although other good qualities are required, not killing anything/anyone is essential to thavam — vigorous prayers towards gods performed with an objective to accomplish. Likewise, though other qualities are required, not speaking of others’ faults is essential to characteristic perfection.

அக்டோபர் 6, 2013

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு (சான்றாண்மை; 981)
சான்றாண்மை மேற்கொள்வது தன் கடமை என்று கருதி வாழ்பவர்க்கு நல்ல குணங்கள் அனைத்தும் இயல்பாகவே அமையும்.

Those who live thinking that being perfect is their duty, will obtain all good qualities by their very nature.

அக்டோபர் 5, 2013

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும் (பெருமை; 980)
பெருமையுடையவர் மற்றவர்களது நிறைகளைக் கூறி, குறைகளைக் கூறாது விடுவர். சிறுமையுடையவர்களோ, மற்றவரது நிறைகளைக் கூறாது குற்றங்களை மட்டுமே சொல்வர்.

Noble people only say good things about others, ignoring bad things. Ignoble people, however, only say the bad things leaving the good things out.

அக்டோபர் 4, 2013

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து (பெருமை; 978)
உயர்ந்த பண்புகள் உடையவர் எப்போதும் பணிவுடனே இருப்பர். அவ்வுயர்ச்சி இல்லாதவர் எப்போதும் தன்னைத் தானே வியந்து கர்வம் கொள்வர்.

Noble people are always humble. Only the ignoble are proud of themselves.

அக்டோபர் 3, 2013

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல் (பெருமை; 975)
அரிய செயல்களைச் செய்ய இயலாதபடித் தாழ்ந்து போயினும், செய்வதற்கு அரிய செயல்களை விடாது செய்து முடிப்பவரே பெருமை உடையவர்.

Noble people do noble things, even when their lives change and doing noble things becomes difficult for them.

அக்டோபர் 2, 2013

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் (பெருமை; 972)
பிறப்பால் எல்லா உயிர்களும் சமம். உயிர்களின் பெருமை அவை செய்யும் செயல்களால் நிர்ணயிக்கப்படுவதால் உயிருக்கு உயிர் மாறுபடுகிறது.

Everyone is equal by birth. Glory of each individual is then earned by what they do.

அக்டோபர் 1, 2013

ஒளிஒருவற் குள்ள வெறுக்கை இளிஒருவற்
கஃதிறந்து வாழ்தும் எனல் (பெருமை; 971)
ஒருவருக்குப் பெருமையாவது அவர் மனதிலுள்ள ஊக்கமே. அவ்வூக்கம் இல்லாமலும் வாழ்ந்துவிடலாம் என எண்ணுவது கேவலமே.

Pride is one’s own mental strength. Even thinking of living without mental strength is a disgrace.