ஏப்ரல் 2, 2013

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை (590)
நன்றாகப் பணிபுரியும் ஒற்றனுக்குச் சிறப்புச் செய்யும் மன்னன் அதைப் பிறர் அறியும் வகையில் செய்யக் கூடாது.  அப்படிச் செய்தால் மறைந்திருக்க வேண்டிய தன் ஒற்றனைத் தானே வெளிப்படுத்தியதுபோல் ஆகும்.

A king who wants to reward his spy for doing good work should do it in secrecy.  Otherwise the king himself would reveal his spy.