ஃபெப்ருவரி 22, 2013

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (127)
ஒருவன் எதைக் கட்டுப்படுத்தாவிட்டாலும் தன்னுடைய நாக்கை — அதாவது தான் சொல்லும் சொற்களைக் — கட்டுப்படுத்த வேண்டும்.  அப்படிக் கட்டுப்படுத்தாமல் போனால் சொற்கள் அவனுக்கு மிகுந்த துன்பம் விளைவிக்கும்.