இரத்தலும் ஈதலே போலும்

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு (1054)
இரத்தல் இல்லாமல் ஈதல் இல்லை.  ஈதல் உயரியதென்றால், அதற்கு வழிவகுக்கும் இரத்தலும் உயரியதன்றோ?

மறைத்துப் பேசுவதைக் கனவிலும் எண்ணாதவர் தன்னால் முடிந்தால் நிச்சயம் கொடுத்து விடுவார்.  அவரிடம் கேட்பதும், அவரிடமிருந்து பெற்றுக்கொள்வதும் தனித்தனியாக நடக்காது... கேட்டதும் கிடைத்து விடுகிறது, அதனால் இரண்டும் ஒன்றே எனப் பொருள் கொள்ளலாம்.

மறைத்துப் பேசுவதைக் கனவிலும் எண்ணாத ஒருவர் கேட்பதையும் பெறுவதையும் ஒன்றாகவே எண்ணுவார் என்றும் பொருள் கொள்ளலாம்.

இந்தக் குறள் கொஞ்சம் புதிரானதாகவே இருக்கிறது.  இதனை எப்படிப் புரிந்துகொள்வது என்று விளங்கவில்லை.