ஜனவரி 7, 2013

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி (1060)
பிச்சை எடுப்பவன், இல்லை என்பவரிடம் கோபப்படக் கூடாது.  மனமிருந்தாலும் சிலரால் கொடுக்க முடியாமல் போகலாம் என்பதற்குப் பிச்சை கேட்பவனின் வறுமையே சாட்சி.