ஜனவரி 15, 2013

செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற (302)
நம் சினம் (கோபம்) செல்லுபடியாகாத இடத்தில் சினங்கொள்வது நமக்குத் தீங்கு விளைவிக்கும்.  நம் கோபம் செல்லுபடியாகும் இடத்திலும்கூடக் கோபம் நன்மை தராது.  எந்த நிலையிலும், கோபத்தைப்போல் தீங்கு விளைவிப்பது ஏதும் இல்லை.