ஆகஸ்ட் 30, 2013

இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு (மானம்; 970)
ஒரு இழிவு நேர்ந்தால் அதன்பின் உயிரோடு வாழாத மானமுள்ளவர்கள் புகழை இந்த உலகம் தொழுது நிற்கும்.

The world would praise the fame of those who wouldn’t live on once they face a disgrace.

ஆகஸ்ட் 29, 2013

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின் (மானம்; 965)
குன்றுபோல் உயர்ந்த பெருமையுடைய ஒருவர், தாழ்வான செயல்களை ஒரு குன்றிமணியளவுக்குச் செய்தாலும்கூட அவரது தரத்தில் தாழ்ந்து போவார்.

An ignoble deed as small as a crab’s eye is sufficient to debase a person with nobility as huge as a hill.

ஆகஸ்ட் 28, 2013

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை (மானம்; 964)
நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன்னுடைய மானத்தைக் கைவிட்டுக் கீழான செயல்களச் செய்பவர் தலையில் இருந்து உதிரந்துவிட்ட முடியைப்போன்றே எண்ணப்படுவார்.

Even when born in a noble family, a person who has degraded to ignoble is like hair that has fallen off one’s head, and will be treated as such.

ஆகஸ்ட் 27, 2013

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு (குடிமை; 963)
செல்வம் மிகுந்த காலத்தில் பணிவுடனும், செல்வம் குறைந்து வறுமை வந்த காலத்தில் தன் குலப் பெருமையை மனதில் கொண்டு கீழான செயல்களைச் செய்யாமலும் இருக்க வேண்டும்.

People from noble families should stay humble when they are wealthy and powerful. They should remember their heritage and not involve in ignoble deeds when they have lost their wealth and power.

ஆகஸ்ட் 26, 2013

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல் (மானம்; 961)
இன்றியமையாத செயல்களே ஆனாலும் குல மானத்தைக் குன்றச் செய்யும் செயல்களைச் செய்யாது விடுக.

Do not do things that may hurt your family’s esteem, even if doing them is essential.

ஆகஸ்ட் 25, 2013

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல் (குடிமை; 959)
ஒரு நிலத்தின் தன்மையை அதில் விளைந்த பயிர் காட்டும். அதுபோல, நல்ல குடும்பத்தில் பிறந்தவரை அவர் வாயிலிருந்து வரும் சொல் காட்டும்.

Crops show the quality of the land that they grow on. Likewise, words that come out from a person shows the nobility of their family.

ஆகஸ்ட் 24, 2013

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து (குடிமை; 957)
நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் ஏற்படும் குறை, நிலவிலுள்ள கறை போல அனைவருக்கும் தெரிந்துவிடும்.

Any shortcoming of people from noble families will be popularly known like the stain on the surface of moon.

ஆகஸ்ட் 23, 2013

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு (குடிமை; 953)
புன்னகையோடு கூடிய முகமலர்ச்சி, வறியவர்க்கு வேண்டும் பொருள் கொடுப்பது, இனிமையான சொற்களைப் பேசுவது, எதையும்/எவரையும் இகழ்ந்து பேசாமை, ஆகிய நான்கும் உயர்குடும்பத்தில் பிறந்தவரது குணங்கள்.

Always smiling, giving to the needy, speaking sweet words, and not demeaning [anything/anyone] are the four characteristics of people belonging to noble families.

ஆகஸ்ட் 22, 2013

ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார் (குடிமை; 952)
நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் ஒழுக்கம், உண்மை, நாணம் ஆகிய மூன்றிலிருந்தும் விலகமாட்டார்.

People born in noble families will never stray from discipline, truth, and shyness. [Shyness here means shying away from doing ignoble things, shying away from disrespecting elders, and the like.]

ஆகஸ்ட் 21, 2013

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல் (மருத்துவம்; 949)
நோயாளியின் வயது, எடை முதலான உடல் அளவு, நோயின் தீவிரம், மருத்துவத்திற்குச் சரியான காலம் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்து மருத்துவம் செய்ய வேண்டும்.

When treating a patient, a doctor should consider the patient’s physical state such as his age, weight, etc., severity of the disease, and time appropriate for treatment.