ஃபெப்ருவரி 5, 2013

நல்லவை யெல்லாஅந் தீயவாம் தீயதும்
நல்லவாம் செல்வம் செயற்கு (375)
ஊழ் (விதி) ஒத்துழைக்காதபோது செல்வம் சேர்க்க நல்ல வகையில் பிழையின்றிச் செய்யும் முயற்சிகள்கூட கைகூடாமல் போகலாம்.  நம் முயற்சிகள் சரியில்லாதபோதும் விதி நம் பக்கம் இருக்குமானால் செல்வம் நம்மிடம் வந்து சேரும்.