மே 6, 2013

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று (678)
ஒரு செயலைச் செய்வதன் மூலம் மற்றொன்றை முடித்துக்கொள்வது மதங்கொண்ட ஒரு யானையால் மற்றொரு யானையை அடக்கிப் பிடிப்பது போன்றது. (ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடிப்பது எளிதல்ல. இருப்பினும், கடினமான செயல்களில் ஈடுபட நேர்கையில் அச்செயலின் மூலமே வேறெதையும் ஆக்கிக்கொள்ள முடியுமா என ஆராய்ந்து ஒன்றுக்கு மேற்பட்ட காரியங்களை முடித்துக்கொள்வது புத்திசாலித்தனம்.)

Completing one task in such a way that it paves way for completing another is like capturing one elephant with another. (Capturing one elephant with another is not easy. Nevertheless, think about what else can come from the completion of task at hand and try to complete multiple tasks together.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக